×

“ஜீ.. நீங்க ரொம்ப லேட்டு..” பாஜ தேர்தல் அறிக்கை இன்று வௌியீடு

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி பாஜவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று வௌியிடுகிறார். 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரசின் 5 நீதிகள், 25 உத்தரவாதங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை கடந்த 5ம் தேதி வௌியாகி மக்களிடையே வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையை தயாரிக்க மறந்த பாஜ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் கடந்த பிறகே மார்ச் 30ம் தேதி தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது. மக்களின் கருத்துகளை கேட்க நாடு முழுவதும் உள்ள பாஜ அலுவலகங்களில் ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில் மக்களின் எதிர்பார்ப்புகள், ஆலோசனைகள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. பாஜவின் பிரத்யேக செல்போன் எண், நமோ செயலி, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மக்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன.

இந்த ஆலோசனைகளை அடிப்படையாக வைத்து தேர்தல் அறிக்கையை தயாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் அடங்கிய குழுவை பாஜ அமைத்திருந்தது. இந்நிலையில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பாஜவின் தேர்தல் அறிக்கை இன்று வௌியாகிறது. இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையை வௌியிட உள்ளார். இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகளுக்கான பல்வேறு அறிவிப்புகள் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post “ஜீ.. நீங்க ரொம்ப லேட்டு..” பாஜ தேர்தல் அறிக்கை இன்று வௌியீடு appeared first on Dinakaran.

Tags : BAJA ,New Delhi ,Modi ,BJP ,18th ,Lok Sabha elections ,Congress ,Bajaj ,Dinakaran ,
× RELATED மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜ...